top of page

விஜய் ஹசாரே டிராப வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் மிசோரத்தை சுருட்டியது தமிழகம்

  • மிசோரம் அணி 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  • தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.

Vijay hazare trophy      Tamilnadu
Vijay hazare trophy Tamilnadu

விஜயநகரம்:

  • இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், மிசோரம் அணிகள் மோதின.

  • முதலில் பேட்டிங் செய்த மிசோரம் வீரர்கள் தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

  • இதனால் மிசோரம் 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  • தமிழகம் சார்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். விஜய் சங்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

  • இதையடுத்து, 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹாஜே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

  • இறுதியில், தமிழகம் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெகதீசன் 46 ரன்னும், துஷார் ரஹாஜே 27 ரன்னும் எடுத்தனர்.

  • தமிழகம் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி சத்தீஸ்கர் அணியுடன் மோதுகிறது.

Comments


bottom of page