top of page

வீல் சேருடன் 117 அடி உயரத்தில் இருந்து குதித்த வாலிபர்.

  • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

  • சில பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இவ்வாறு ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தவறு என பதிவிட்டனர்

Social Media
Social Media
  • கால்கள் செயல் இழந்த நிலையிலும் வாலிபர் ஒருவர் வீல் சேருடன் பங்கி ஜம்பிங் சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள இந்தியாவிலேயே மிக உயரமான பங்கி ஜம்பிங் சாகசம் செய்யும் தளத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அபைய் டோக்ரா என்ற வாலிபர் இந்த சாகசத்தை நிகழ்த்தி உள்ளார். அவரை 117அடி உயரத்தில் இருந்து குதிக்க வைக்கும் முன்பு அவரது வீல் சேருடன் சேர்த்து அவருக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

  • பின்னர் அவர் சாகசத்தை நிகழ்த்திய பிறகு மகிழ்ச்சி அடைகிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சிலர், அந்த வாலிபரின் தைரியத்தை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இவ்வாறு ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தவறு என பதிவிட்டனர்.

#Social Media

Comments


bottom of page