top of page

வில்லியம்சன் சதம் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

  • வில்லியம்சன் 156 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  • 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 453 ரன்கள் குவித்தது.

NZ VS ENG   Kane  williamson
NZ VS ENG Kane williamson

ஹேமில்டன்:

  • நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டது.

  • 204 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது.

  • வில்லியம்சன் 50 ரன்னும், ரவீந்திரா 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வில் யங் 60 ரன் எடுத்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.

  • முன்னாள் கேப்டன் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 137 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 105-வது டெஸ்டில் விளையாடும் வில்லியம்சனுக்கு இது 33-வது சதமாகும். அவர் 156 ரன் குவித்து அவுட் ஆனார்.

  • இறுதியில் நியூசிலாந்து 453 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

  • இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    #NZ VS ENG #Kane williamson #Tamilpublicnews


Comments


bottom of page