வெள்ளகோவில் அருகே இன்று காலை பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து
- tamil public
- Dec 26, 2024
- 1 min read
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன.

வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவருக்கு சொந்தமான நூல் மில் சேரன் நகர் பகுதியில் உள்ளது. இந்த மில் 2 ஷிப்டுகளாக இயங்கி வருகிறது. 60 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை மின்கசிவு காரணமாக திடீரென பில்டர் பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து வெள்ள கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் காங்கயத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.
மேலும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
#Vellakovil #Fire accident #Tamilpublicnews






Comments