top of page

விவசாயிகள் மீண்டும் பேரணி- 12 கிராமங்களுக்கு இணைய சேவை முடக்கம்

  • அரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

  • வங்கிசேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Internet  service shutdown    Farmers rally
Internet service shutdown Farmers rally
  • மத்திய அரசுகடந்த 2020-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.

  • விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.

  • கடந்த 6 மற்றும் 8-ந் தேதிகளில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை முன்னேறி செல்லவிடாமல் தடுத்தனர். இதையும் மீறி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் விவசாயிகள் சிலர் காயம் அடைந்தனர்.

  • இந்த நிலையில் குறைந்த பட்ச ஆகார விலையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி இன்று பேரணி செல்கிறார்கள்.

  • அரியானா மாநிலம் ஷம்பு எல்லை பகுதியில் இருந்து 101 விவசாயிகள் அமைப்பு இன்று பிற்பகலில் டெல்லியை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள். இதை விவசாயிகள் அமைப்பான கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று காலை தெரிவித்தார்.

  • டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடத்த வருவது 3-வது முயற்சியாகும். விவசாயிகள் டெல்லியை நோக்கி அணி வகுத்து வருவதையொட்டி அரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

  • இதற்கிடையே விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

  • இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செல்போன் சேவை, வங்கிசேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#Internet service shutdown #Farmers rally #Tamilpublicnews

Comments


bottom of page