வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் 6 தொகுதிகளை கேட்போம்- காதர் முகைதீன்
- tamil public
- Dec 27, 2024
- 1 min read
திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி.

நெல்லை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. தி.மு.க. கூட்டணி தேர்தல் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி. என்றும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்போம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அது கலியுகத்தின் கோலம். கடைசி யுகத்தின் கோலம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.
இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க ஆன்மீக நெறியை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. கொலை சம்பவம் தொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குற்றம் நடந்த பின்னர் தான் தடுக்க முடியும். குற்றம் நடப்பதற்கு முன் அதனை தடுக்க வேண்டும் என்பது ஆண்டவனாலும் முடியாத காரியம்.
அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்து கொள்வது அவர் செய்த பாவத்தை தடுப்பதற்கு. தி.மு.க. அரசை அகற்றினால் தான் காலணி அணிவேன் என்று கூறினால் அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் செருப்பு போட்டு நடக்க முடியாது.
திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் பரவ வேண்டும். அனைத்து மாநிலத்திலும் பரவ வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்போம். அதில் நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதி இருக்கும்.
Comments