வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் எச்சரிக்கையை தளர்த்தியது வானிலை ஆய்வு மையம்
- tamil public
- Dec 22, 2024
- 1 min read
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
#Low pressure #Strom warning #Tamilpublicnews






Comments