ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்ப வரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

புதுச்சேரி:
புதுச்சேரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் மூலமாக விபத்து இறப்பில்லா புதுச்சேரி நிச்சயம் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்ப
வரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி அனைத்து அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிவதை பின்பற்ற வேண்டும். இதனை துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.1,000 அபராதமும். 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.






Comments