இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- tamil public
- Dec 2, 2024
- 1 min read
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அலுவலல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது

TN Assembly Speaker Appavu சென்னை:.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு எடுக்கும் என்று சாபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அலுவலல் ஆய்வுக் குழு கூட்டத்தில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டசபை கூட்டத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.






Comments