செஞ்சி அருகே ஃபெஞ்சல் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
- tamil public
- Dec 18, 2024
- 1 min read
ரூ.2 ஆயிரம் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்.
போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை.

செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்களவாய் கிராம பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்த புயல் நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்காததை கண்டித்து செஞ்சி சேத்பட் சாலையில் மேல்களவாய் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவில் மேல்மலையனூர் தாலுக்கா மற்றும் செஞ்சி தாலுகாவில் ஒரு சில பகுதிகளுக்கு குறிப்பாக வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கலவாய், வடவானூர், வடபுத்தூர், முடையூர் உள்பட ஏராளமான கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை, எனக் கூறி இருந்த நிலையில், தற்போது மேல்களவாய் கிராம பொதுமக்கள் செஞ்சி சேத்பட் சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்டு எங்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் புயல் நிவாரண நிதி எங்கள் பக்கத்தில் இருக்கும் ஊர்களின் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியை புறக்கணித்து விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தற்போது செஞ்சி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை செய்து நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்குவது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர்.
#Senji #Fenjal #Relief fund #Public road block #Tamilpublicnews






Comments