top of page

சாத்தனூர் அணை திறப்பு வாய்ச்சவடால் விடுகிறார் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் சேகர்பாபு தாக்கு

  • சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

  • புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Minister Sekar  Babu   Sathanur Dam
Minister Sekar Babu Sathanur Dam

சென்னை:.

  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

  • புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல்தான் இருந்துள்ளது.

  • சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

  • சென்னையில் கடந்த காலங்களில் 13 செ.மீ மழைக்கே 3 நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது மழை பெய்த 12 மணி நேரங்களில் இயல்பு நிலைக்குச் சென்னை திரும்பியுள்ளது.

  • இதற்கு முதலமைச்சரின் போர்க்கால மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.

  • சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் 5 முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாகத்தான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

  • உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் இன்று உயிர்ச்சேதங்கள் இல்லை

  • தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு உயிர்கள்

  • எடப்பாடி பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல், ஒன்றிய அரசிடம் இருந்து அரசு கேட்ட நிவாரணத்தை வாங்கித் தரட்டும்.

  • திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் இரு நாட்களில் சரிசெய்யப்படும்.

  • திருவண்ணாமலையில் வழக்கம்போல் கார்த்திகை மகா தீபத்திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்

    #Minister Sekar Babu #Sathanur Dam

Comments


bottom of page