சென்னையில் ஜூலை மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது- அமைச்சர் கே.என்.நேரு
- tamil public
- Jan 9
- 1 min read
7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.
ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டசபையில் உறுப்பினர் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூறியதாவது:-
சென்னைக்கு தற்போது தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டி.எம்.சி. ஆனால் தற்போது 15.560 டி.எம்.சி. குடிநீர் கொள்ளவு உள்ளது. எனவே போதுமான அளவுநீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டின் 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1040 எம்.எல்.டி அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
#Drinking water issue #Minister kn nehru #Tamilpublicnews






Comments