top of page

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் ஆய்வு

  • ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

  • கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து இருந்தார்.

Chembarambakkam lake    Minister durai murugan
Chembarambakkam lake Minister durai murugan
  • சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்தது. இதனால் ஏரியில் இருந்து கடந்த 13-ந்தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

  • இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  • கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.5 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2860 மில்லின் கனஅடியாகவும், நீர்வரத்து 1700 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 3000 கனஅடியாகவும் உள்ளது. 

    #Chembarambakkam lake #Minister durai murugan #Tamilpublicnews

Comments


bottom of page