top of page

ஜல்லிக்கட்டு போட்டி- தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  • ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

  • ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

Jallikattu    TN Govt
Jallikattu TN Govt

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்தபடியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

* மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.

* ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

* ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Comments


bottom of page