top of page

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

  • நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

  • வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை.

Thuthukudi   Nellai   Heavy rain
Thuthukudi Nellai Heavy rain

  • மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால் 19-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரித்திருந்தது.

  • அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • இந்த நிலையில் இன்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • ஏற்கனவே பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆறு செல்லும் இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    #Thuthukudi #Nellai #Heavy rain #Tamilpublicnews


Comments


bottom of page