திருச்செந்தூர் வருவதை தவிர்க்கவும்- மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
- tamil public
- Dec 14, 2024
- 1 min read
சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முக்கானி, ஏரல் பகுதிகளில் உள்ள பாலங்களில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Tiruchendur murugan temple #Heavy rain #Tamilpublicnews






Comments