திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை-எ.வ.வேலு
- tamil public
- Dec 16, 2024
- 1 min read
உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும்.
யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.

மதுரை:
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள், கலைஞர் நூற்றாண்டு செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
மதுரை கோரிப்பா ளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது.
மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.
2001-ம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை.
எனக்கும், தி.மு.க.வுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
#DMK #Thirumavalavan MP #Minister mp velu #Tamilpublicnews
Comments