திருவண்ணாமலையில் மகாதீபம் நிச்சயம் ஏற்றப்படும்- அமைச்சர் உறுதி
- tamil public
- Dec 10, 2024
- 1 min read
முதல்வர் உத்தரவுப்படி கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.
. காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்படும்.

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலை உச்சியில் நிச்சயம் மகா தீபம் ஏற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
எவ்வித சிறு அசம்பாவிதமும் இன்றி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவுப்படி கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.
காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்படும். இந்தாண்டும் எந்தவித தடையும் இன்றி மலையின் உச்சியில் தீபம் எரியும்.
நெய், கொப்பரையை மலைக்கு மனித சக்தியை பயன்படுத்தி கொண்டு செல்லப்பட்டு, சிறு உயிரிழப்பும் இன்றி தீபத்திருவிழா நடத்தப்படும். பக்தர்களை பயன்படுத்தி 350 கிலோ எடை கொண்ட கொப்பரை, 4.5 டன் நெய் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்படும்.
#Thiruvanamalai Temple #Minister Sekar Babu #Karthigai Deepam
Comments