top of page

தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றி கொண்டு இருக்கும் கேரளா அரசுக்கு பிரேமலதா கண்டனம்

  • குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்?

  • தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன.

Premalatha vijayakanth    Kerala govt    DMDK
Premalatha vijayakanth Kerala govt DMDK

சென்னை:

  • தமிழ்நாட்டின் வளங்களான கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு, கேரளாவிற்குக் கடத்திக் கொண்டு இருக்கின்றனர். கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவு, குப்பைகள், ஏலக்ட்ரானிக் கழிவுகள், போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்கைகளில் டன்னு டன்னாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

  • எல்லைகளைப் பாதுகாக்காமல் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்து தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்த அரசின் செயல்கள் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு. பக்கத்தில் இருக்கும் கேரளா எல்லா வளத்தோடும், நயத்தோடும் சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்? அரசாங்கத்தின் அதிகாரிகள், சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்களும் என்ன செய்கின்றனர்? இந்த அளவிற்குக் கேவலமான நிகழ்வுகள் தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன.

  • இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. இது மிகமிக ஒரு கண்டிக்கத்தக்க விஷயம். தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் நாட்டிற்கே அதே குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

  • இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிய கேரள அரசைக் கடுமையா கண்டிக்கிறோம்.

    #Premalatha vijayakanth #Kerala govt #DMDK #Tamilpublicnews

Comments


bottom of page