top of page

தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர்- கனிமொழி எம்.பி.

  • தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

  • பெரியாரின் கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி - மத - ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம்.

Periyar    Kanimozhi     DMK
Periyar Kanimozhi DMK
  • தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் பெரியார் குறித்து பதிவிட்டுள்ளார்.

  • அதில், திராவிட இனத்தின் எரிதழலாய் - கொள்கைப் பேரொளியாய் - பகுத்தறிவுச் சுடராய் - ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் - சமரசமற்ற போர்க்குரலாய், என்றென்றும் தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.

  • அவரது கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி - மத - ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம், சமத்துவ சமூகம் படைப்போம்.

    #Periyar #Kanimozhi #DMK #Tamilpublicnews


Comments


bottom of page