தமிழ்நாட்டில் 17% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்
- tamil public
- Dec 7, 2024
- 1 min read
சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 07.12.2024 வரை 448.0 (மி மீ) மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நா வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 07.12.2024 வரை 448.0 (மி மீ) மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 384.5 (மி மீ) தான் பெய்யும்.
மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளது.
#Northeast Monsoon #Heavy Rain






Comments