top of page

போச்சம்பள்ளியில் கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதி

  • குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.

  • தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pochampalli      Rain    Public
Pochampalli Rain Public

போச்சம்பள்ளி:

  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி குள்ளனுர் கோணனூர், வடமலம்பட்டி மற்றும் அதன் சுற்றிய வட்டார கிராமங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது.

  • கனமழைக்கு குள்ளனூர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.

  • மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரானது புகுந்து பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இரவு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் வீட்டிலிருந்த அரிசி துணி மற்றும் பொருட்கள் ஆவணங்கள் சேதமாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

  • தற்பொழுது குடியிருப்பு வாசிகள் வீட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் கிராம மக்களுக்கு கூறுகையில்,

  • குள்ளனூர் கிராமம் முதல் போச்சம்பள்ளி வரையில் தண்ணீர் செல்லும் பாதையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்து மண் கொட்டி சமப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீரானது செல்ல பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  • எனவே தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த பகுதிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  • இதைத்தொடர்ந்து அவர் ஏரி கால்வாய் பகுதிகளை அகலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கவும், உடனே உணவு வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    #Pochampalli #Rain #Public #Tamilpublicnews

Comments


bottom of page