புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்- தூத்துக்குடியில் 30-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
- tamil public
- Dec 18, 2024
- 1 min read
தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் இனி மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.

2024-25ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ந்தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் மூலம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் இனி மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.
#MK Stalin #Pudhumai penn scheme #TN Govt #Tamilpublicnews






Comments