முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு
- tamil public
- Dec 6, 2024
- 1 min read
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு சென்னை வருகை.
நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணி

.ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வந்துள்ளனர்.
புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர்.
குழுவில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, மத்திய குழு இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துள்ள மத்தியக் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
#Committee Meeting #TN Chief Minister #MK Stalin






Comments