top of page

மின் விபத்தில் இறந்தால் குடும்பத்துக்கு வழங்கும் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு- தமிழக அரசு உத்தரவு

  • மின் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

  • மின்விபத்தால் பாதிக்கப்படும் பசுக்கள், எருதுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரம் மாற்றமின்றி வழங்கப்படும்.

TN Govt      Relief fund
TN Govt Relief fund

சென்னை:

  • மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சாரம் தாக்கி பொதுமக்கள் சிலர் உயிர் இழக்கின்றனர். சிலர் காயம் அடைகின்றனர். இதனால், அவர்களுடைய குடும்பம் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தினருக்கு கடும் நிதி இழப்பு ஏற்படுகிறது.

  • இவ்வாறு பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அறிவித்தார்.

  • இதன்படி, மின் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. மின்விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிவாரண நிதி ரூ.10 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும். அதே போல், இரண்டு கை கால்கள் அல்லது 2 கண்களை இழப்பவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், ஒரு கைகால் அல்லது ஒரு கண்ணை இழப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

  • அதே சமயம், மின்விபத்தால் பாதிக்கப்படும் பசுக்கள், எருதுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரம் மாற்றமின்றி வழங்கப்படும். கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்ற மின்வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Comments


bottom of page