மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை- ஆலோசனை நடத்துகிறார் அமைச்சர்
- tamil public
- Dec 3, 2024
- 1 min read
ஃபெஞ்சல் புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்
Minister Anbil Mahesh Poyyamozhi Fengal சென்னை:.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
Comments